வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு வல்வெட்டித்துறை சந்தி பஸ் தரிப்பிடத்தில் வல்வை ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்களுக்கான வெள்ள நிவாரணத்துக்காக பெருமளவான வல்வெட்டித்துறை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தார்கள்.
சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், புடவைகள், மருந்துகள் இரவு பகலாக வல்வை இளைஞர்களால் பொதியிடப்பட்டது. நிவாரணப் பணிகளை பருத்தித்துறை பிரதேச செயலகத்திலிருந்து வருகைதந்து பார்வையிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பதுளை வந்தடைந்த வல்வை ஒன்றிய நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பெருமளவான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வீதிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. நிவாரண பொருள் சேகரிப்பு, பொதியிடல், போக்குவரத்து மற்றும் வழங்கல் பணிகளில் வல்வை இளைஞர்கள் பல ஆபத்துகளை எதிர் கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.