Valvai Education Development Association (VEDA)

VEDA கல்வி நிலையமானது 2011 ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு பொது அமைப்பாகும்.

வல்வை நகரில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பல்வேறுபட்ட இடப்பெயர்வுகளினாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட வல்வை மாணவர்களின் கல்வி நிலையினை சீர்தூக்கி ஓர் உன்னத வளர்ச்சிப் போக்கினை எற்படுத்தும் நோக்கிலே வல்வை மக்களால் VEDA கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டது கல்வி நிலையமானது படிப்படியாக வளர்ச்சிப் போக்கினை எய்தி இன்று 265 மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையமாக வல்வை மண்ணில் மிளிர்கின்றது.

பல பிரபல முன்னணி ஆசிரியர்களினைக் கொண்ட உயர்தரத்திற்கான கணித, விஞ்ஞான பிரிவுகளும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடமும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவது VEDA கல்வி நிலைய வளர்ச்சியினை எடுத்துக் காட்டுகின்றது.

VEDA கல்வி நிலையத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரித்தானிய வல்வை நலன்புரிசங்கம் மாதாந்தம் ரூ 200000.00 நிதி பங்களிப்பை வழங்குகின்றது. VEDA கல்வி நிலையமும் அதன் நிர்வாக மையமும் கொற்றங்கலட்டி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் முகவரியில் அமைந்துள்ளது

VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த (உ/த) பெறுபேறுகள்(2024)

Winter Get Together 2025

St Boniface Church, Function Suite

185 Mitcham Rd, London, SW17 9PG

Award Application Online Form