வல்வெட்டித்துறை நகர சபையினால் தீருவில் நினைவில் திடல் தூய்மையாக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், கேணல் கிட்டு நினைவு இடங்களில் நினைவேந்தலுக்கு இடையூறாக நிறுவப்பட்டிருந்த சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அகற்றப்பட்டு வேறு இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அங்கு படர்ந்திருந்த பார்த்தீனிய செடிகளும் வெட்டி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நினைவுத்திடலை சுத்தமாக்கும் பணியில் அனைத்து நகர சபை உறுப்பினர்களும் பணியாளர்களுடன் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடன் சில பொதுமக்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்..
Facebook
Twitter
WhatsApp