இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 17/05/2025 சனிக்கிழமை Mitcham Figge’s Marsh மைதானத்தில் நடைபெற்றது
எமது மக்கள் பட்ட கஸ்ரங்கள், துன்பங்கள், உணவின்றி துடித்தமக்கள் கஞ்சியை மட்டும் உண்டு தங்கள் உயிர்களை காப்பாற்றுவதற்கு போரடியவலிகள் இன்றும் எம்மை விட்டு அகலாத வலிகளாக நாம் சுமந்து கொண்டு இருக்கின்றோம். அந்தவேதனையின் வெளிப்பாடக வருடம் தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி உலகமக்களுக்கு அந்தவேதனை தெரியப்படுத்துகின்றோம்
நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவானோர் மனமுருகி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர். நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு ” முள்ளிவாய்க்கால் கஞ்சி ” சிரட்டையில் பரிமாறப்பட்டது.