மாவீரர் வாரத்தையொட்டி வல்வெட்டித்துறையில் உள்ள மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வல்வை நகரசபை மண்டபத்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.
இதன்போது கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர். நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையிலும் மாவீரர்களுக்கு அதி உச்ச மரியாதையை வழங்கும் வகையிலும் வல்வை வீதிகளில் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன