சாதிக்க முயற்சிக்கும் மாணவ மாணவிகளுக்காக பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் நேரடி ஒழுங்கமைப்பு ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கும் பயிற்சி பட்டறையும் சிதம்பரக்கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வளவாளராக Cambridge University விரிவுரையாளர் Dr சபேசன் சிதம்பரநாதன் கலந்து சிறப்பித்தார்.
பல தசாப்த யுத்த சூழல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் எம் இனத்தின் சிறந்த ஆளுமைகளை உருவாக்க, எதிர்கால சாதனையாளர்களுக்கு ஒரு அறிவுப் பகிர்வாக இந்த கருத்தரங்கை Dr சபேசன் நிகழ்த்தியிருந்தார்.
கருத்தரங்கு முடிவில் மாணவர்கள் வெளியிட்டிருந்த பின்னூட்டங்களில், மேடையில் மட்டும் நின்று பேசும் பேச்சை கேட்ட எங்களுக்கு மிக நெருக்கமாக எம்மிடம் வந்து எங்கள் மனதுக்கு பலமாக பேசிய திரு சபேசன் அவர்களை பாராட்டி நன்றியை தெரிவித்து இருந்தனர்.
அவரின் பேச்சு மாணவர்களையும் தாண்டி முக்கியமாக ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமானதாக அமைந்திருந்தது. பிள்ளைகளை எப்படி எங்கே நாம் வைத்திருக்கின்றோம், அவர்களை எப்படி முன்னகர்த்துவது என்பதை மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் உணர்த்தியதாக உதவித்தலைமை ஆசிரியர் தன் நன்றி உரையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு உரிமையாளர் மயூரன் Luxury Minibus Service போக்குவரத்து அனுசரணை அளித்துள்ளார் அவருக்கு வல்வை நலன்புரி சங்கம் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.